60  விழுக்காட்டினர்  வாக்களிப்பர் 

குவா முசாங் , ஆகஸ்ட் 16-

கிளந்தன் , குவா முசாங் நாடாளுமன்றத்  தொகுதிக்கு  உட்பட்ட நீங்கிரி சடடமன்றத்  தொகுதி  இடைத்தேர்தல்  நாளை  சனிக்கிழமை  நடைபெறவிருக்கிறது .

 இந்த இடைத்தேர்தலில்  பதிவுபெற்ற  வாக்காளர்களில்  60  விழுக்காட்டினர்  வாக்களிப்பர்  என்று எதிர்பார்க்கப்படுவதாக  தேர்தல்  ஆணையத்தின்  தலைமைச் செயலாளர்  டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார் .

தேர்தல்  முடிவு , நாளை  இரவு 9 .00  மணிக்கு தெரிந்துவிடும் என்று  எதிர்பார்க்கப்படுவதாக  அவர்  குறிப்பிட்டார். ஓரங் அஸ்லி  கிராமப் பகுதிகளில்   வாக்களிப்பு  நேரம்  பிற்பகல்  2  மற்றும்  3  மணிக்குள்  முடிவுறும் . வாக்குப்பெட்டிகள்  குறிப்பிட்ட  நேரத்தில்  சென்றடைவதை  உறுதி  செய்வதற்கு  இரண்டு   ஹெலிகாப்ட்டார்கள்  பயன்படுத்தபட  விருப்பதாக  அவர் தெரிவித்தார் .

WATCH OUR LATEST NEWS