கோலாலம்பூர், ஆகஸ்ட் 16-
வாகனமோட்டும் சோதனையில் அமராமல் , வெறும் பணம் செலுத்தி பெறப்பட்ட லைசென்ஸ் வைத்திருந்த வங்களாதேசி ஒருவர் பட்டுள்ளார்.
கிள்ளான் , ஜாலான் பண்டமாறனில் கடந்த செவ்வாய்க்கிழமை , வாகன மோட்டும் லைசென்ஸின்றி பிடிபட்ட தனது தம்பிக்கு உதவுவதற்காக வந்த அந்த வங்களதேச ஆடவர், கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோத வாகன உரிமத்தை கொண்டிருப்பது அம்பலமானது .
அதற்கு முன்னதாக , ஐஸ் லோரி ஒன்றை செலுத்திய அந்நிய ஆடவர் பிடிப்பட்டதைத் தொடர்ந்து வாகனமோட்டும் உரிமம் இல்லாத அவர் எவ்வாறு லோரியை செலுத்த அனுமதிக்கப்பட்டார் என்று ஆராயப்பட்டதாக சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து இலாகாவின் இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார் .
சம்பந்தப்பட்ட தனது அண்ணனுக்கு பதிலாக அந்த ஐஸ் லோரியை செலுத்தியுள்ளார். தம்பியை காப்பாற்ற ஜேபிஜே அலுவலத்திற்கு வந்த அந்த வங்காள தேசியின் வாகன லைசென்ஸை ,அதிகாரிகள் சோதனையிடத்தப்போது , அது பணம் கட்டி , பெறப்பட்ட சட்டவிரோத லைசென்ஸ் என்பது தெரியவந்துள்ளதாக அஸ்ரின் போர்ஹான் விளக்கினார்