தாய்லாந்தின்  புதிய பிரதமர்  தேர்வு 

தாய்லாந்து , ஆகஸ்ட் 16-

தாய்லாந்தின்  புதிய பிரதமராக பே டோங் டர்ன் ஷினா வத்ரா-வை அந்நாட்டு  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தேர்ந்துதெடுத்துள்ளனர் .

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா-வின் மகளான 37  வயது  பேடோங்டார்ன், புதிய பிரதமராக  தேர்வு செய்யப்படும் மூலம் தாய்லாந்து  இரண்டாவது  முறையாக  ஒரு பெண்ணை  பிரதமராக  பெற்றுள்ளது.

இதற்கு முன்பு  இவரது  அத்தையும், முன்னாள்  பிரதமர் தக்சின் சினவத்ரா-வின் தங்கையுமான யிங் லக் சினவத்ரா,தாய்லாந்தின் பிரதமராக 2011 முதல்  2014 ஆம் ஆண்டு வரையில்  பொறுப்பில்  இருந்தார் . தாய்லாந்தின்  முதல்  பெண் பிரதமர்  இவரே .தற்போது தாய்லாந்தின் பிரதமராக  பதவி வகித்த  ஸ்ரேத்தா தவிசின், சிறைக்கு  அனுப்பப்பட்ட முன்னாள்  வழக்கறிஞர் ஒருவருக்கு  அமைச்சர்  பதவியை வழங்கியதன்  காரணமாக அவர் பிரதமர்  பதவியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார் .

தாய்லாந்து பிரதமராக  பதவி ஏற்று ஓராண்டு  கூட  ஆகாத நிலையில் ஸ்ரேத்தா தவிசின் தமது பதவியை இழந்துள்ளார் . 

WATCH OUR LATEST NEWS