கோலா பிலா,ஆகஸ்ட் 16-
இம்மாதம் முற்பகுதியில் நெகிரி செம்பிலான்- தம்பின்-னில் ஆடவர் ஒருவரை பாராங்கினால் வெட்டி , படுகாயம் விளைவித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இந்திய சகோதரர்கள் கோலா பிளா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர் .
32 வயது R .அருள் , 33 வயது R . காளிதாஸ் மற்றும் 27 வயது R. இளங்கோ ஆகிய மூன்று சகோதர்களும் நீதிபதி நோர்மா இஸ்மாயில் முன்னனியில் நிறுத்த பட்டு , அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது .
வேலை இடத்தில் முன்விரோதம் காரணமாக 46 வயது நபரை மடக்கி , அவரை பாராங் கத்தினாலும்,கத்தினாலும் தாக்கி , கடும் காயங்களை , விளைவித்தகாக 3 சகோதர்களும் குற்றச்சட்டை எதிர்நோக்கியுள்ளனர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ௨௦ ஆண்டு சிறை மற்றும் அபராத விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 ஆவது பிரிவின் கீழ் மூவரும் குற்றச்சட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர் . இதனை தொடர்ந்து மூவரையும் ஒரு நபர் உத்தவாதத்துடன் தலா 5 ஆயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிப்பதற்கு நீதிபதி நார்மா இஸ்மெயில் அனுமதி அளித்தார் .