அலோர் கஜா,ஆகஸ்ட் 16-
ஜோகூர் , மாசாய் -யைச் சேர்ந்த 33 வயது ஆசிரியை இஸ்டிகோமா அஹ்மத் ரோசி கோரக் கொலை தொடர்பில் அவரின் முன்னாள் காதலன் என்று நம்பப்படும் ஒரு முன்னாள் ஆசிரியர் வரும் திங்கட்கிழமை மலாக்கா, அலோர் கஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட விருக்கிறார் .
தலை , காய்-கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த ஆசிரியையின் சிதைந்த உடல் இவ்வாண்டு ஜனவரி 6 ஆம் தேதி அலோர் கஜா-தம்பின் சாலையில் புலவு சேப்பங் , கம்போங் ரீமாவு என்ற இடத்தில் குப்பைத்தொட்டியில் கண்டு பிடிக்கப்பட்டது .
ஜோகூர் , பசீர் குடங் , கோட்ட மாசாய் 3 பள்ளியில் பணியாற்றியவரான அந்த ஆசிரியை கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போனார் . அவரை கொலை செய்ததாக 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .