லங்காவி , ஆகஸ்ட் 16,
லங்கவி தீவில் சுற்றுலா செலவினம் , விலை அதிகம் என்று கூறப்படுவதை
அத்தீவில் சுற்றுலா துறையில் ஈடுபாடுள்ளளோர் வன்மையாக மறுத்துள்ளனர் .
அண்டை நாடான தாய்லாந்தில் தென்பகுதியில் சுற்றுலாத் துறையினர் விதித்து வருகின்ற கட்டணங்கள் மற்றும் செலவினத்துடன் ஒப்பிடுகையில் லங்கவித் தீவில் மலிவாகும் என்று முன்னணி சுற்றுலா பயண நிறுவனமான TROPICAL CHARTERS SDN . BHD நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அலெக்சாண்டர் ஐசக் தெரிவித்துள்ளார்
லங்காவித் தீவில் தங்கும் விடுதி ,உணவு மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் மிக மலிவாகவும் , நிலமாகவும் விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார் .