சுங்கை சிப்புட், ஆகஸ்ட் 18-
விளையாடச் சென்று காணாமல் போன 10 வயது சிறுமி சனிக்கிழமை மாலை 4.20 மணிக்கு, பேராக்,, கம்போங் பெர்சா குடியிருப்புப் பகுதியில் இருந்து சுமார் 50-இல் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில், பொதுமக்களால் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேளையில், குடியிருப்புப் பகுதியில் உள்ள இடத்திற்கு விளையாட சென்ற அச்சிறுமி வீட்டிற்கு திரும்பாதது குறித்து சனிக்கிழமை பின்னிரவு 1.20 மணிக்கு புகார் கிடைத்ததைத் தொடர்ந்து போலிஸ் தேடும் நடவடிக்கையை முடுக்கிவிட்டிருந்தது.
மேலும், கண்டுப்பிடிக்கப்பட்ட அச்சிறுமியின் உடலில் காட்டு விலங்கு தாக்கிய அறிகுறி இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், போலிஸ் உடற்கூறு ஆய்வு முடிவுக்காக காத்திருப்பதாக சுங்கை சிப்புட் போலிஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமது கைசாம் அகமது ஷஹாபுதீன் கூறியுள்ளார்.