புது டெல்லி , ஆகஸ்ட் 20-
மலேசியா- இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்த பயணம் மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் -கிற்குப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கினார்.
இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவன்-னில் அந்த வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக அன்வார் நேற்று புதுடெல்லியைச் சென்றடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் டத்தோஸ்ரீ அன்வார் சந்திப்பு நடத்திய நிலையில், நாட்டின் வளர்ச்சி குறித்து விரைவில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது