மக்களின் ஆதரவிற்குத் அம்னோ தொடர்ந்து போராடும்

மலாக்கா,ஆகஸ்ட் 20-

மலாக்கா – நெங்கிரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி பெற்றதை வைத்து அம்னோவிற்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை முடிவு செய்ய முடியாது என்று அம்னோ துணை தலைவர் டத்தூஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நெங்கிரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னனியும் அக்கட்சிக்கு ஆதரவளித்த அனைத்து கட்சிகளின் கடின உழைப்பும் மற்றும் தொடர்ச்சியான முயற்சியும் அந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அம்னோ தொடர்ந்து மக்களுக்குச் சிறப்பாக சேவையாற்றி மக்களின் பெரும்பான்மையான ஆதரவை பெறும் என்றும் டத்தூஸ்ரீ ஜொஹாரி உறுதியளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS