பத்து பஹாட் , ஆகஸ்ட் 21-
இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆவணமற்ற குடியேறியகள் ஒன்பது பேர் நேற்றிரவு பத்து பஹாட், சுங்கை சங்லாங், பெனுட், என்ற இடத்தில் படகில் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
மலேசிய கடல்சார் அமலாக்க முகமையான எம்எம்இஏ அதிகாரிகள் வழக்கமான ரோந்துப் பணியின் போது, அவர்கள் சென்ற படகைக் கண்டறிந்து, சுங்கை சாங்லாங்கிற்கு தெற்கே 1.2 கடல் மைல் தொலைவில் இரவு 10:30 மணியளவில் தடுத்து நிறுத்தினர்.
சோதனையில் 24 முதல் 51 வயதுடைய ஏழு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை அவர்கள் கைது செய்ததாக MMEA பத்து பஹாட் மண்டல இயக்குனர், கடல்சார் கமாண்டர் முகமட் ஹனிஃப் முகமட் யூனுஸ் கூறினார்.