பெக்கன் ,ஆகஸ்ட் 21-
தகவல் தொடர்பு அமைச்சு மற்றும் போலிஸ் அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்த நபரை நம்பி, 59 வயது முதியவர் தனது உயிரிழந்த மனைவியின் காப்பீட்டு இழப்பீடு மற்றும் EPF-இன் 100 ஆயிரம் ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.
ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடர்பு கொண்ட மோசடி நபர், பாதிக்கப்பட்ட முதியவரின் தொடர்பு எண்ணில் இருந்து 27 முறை மோசடி நடந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
பின்னர், அந்த அழைப்பு மற்றொரு நபருடன் இணைக்கப்பட்டதை அடுத்து, அந்நபர் பாதிக்கப்பட்டவரிடம் விசாரணைக்காக குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு இரு முறை பண பரிவர்த்தனை செய்யும்படி கட்டளையிட்டுள்ளார்.
அதனை நம்பி மாற்றிய பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து முதியவர் போலிஸ் புகார் அளித்துள்ளார்.