நிபோங் தெபால், ஆகஸ்ட் 21-
பொருத்தமற்ற கழிவறை ‘பக்கெட் சிஸ்டத்தை’ மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று அதன் சிறைச்சாலை கொள்கைப் பிரிவு மூத்த இயக்குநர் அஜிடின் சலே கூறினார
பினாங்கு சிறைச்சாலை மிகப் பழமையானது என்றும், அதைத் தொடர்ந்து தைப்பிங், பத்து காஜா, மூவார், அலோர் ஸ்டார் மற்றும் சிரம்பான் சிறைச்சாலைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காலாவதியான இத்தகைய வசதியை புதியதாக மாற்றுவதற்கு சிறைச்சாலைத்துறை செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். இந்தப் பிரச்சினை தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றிடமிருந்து அடிக்கடி புகார்களைப் பெறுவதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.