இலங்கை ஆடவர் கைது

ஜார்ஜ் டவுன் , ஆகஸ்ட் 22-

10 வயது குழந்தைக்குரிய அடையாள ஆவணத்தை சம்ர்ப்பித்து, மலேசிய அனைத்துலக கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவர் UTC Kompleks துன் அப்துல் ரசாக் (KOMTAR) குடிநுழைவு துறை அலுவலகத்திற்கு உள்ளூர் பெண் ஒருவரைப் போலி தாயாக நடிக்க வைத்து அழைத்து சென்றுள்ளார்.

அந்த ஆடவரின் உடல் தோற்றம் 10 வயது சிறுவர் இல்லாத்தையும்; அவர் பேசிய தமிழ்மொழி மலேசியர்கள் பேசுவதைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்ததையும் உணர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர் குற்றச்செயல் அம்பலாமனதாக பினாங்கு குடிநுழைவு துறை இயக்குநர் நூர் சுல்பா இப்ராஹிம் கூறியுள்ளார்.

அதோடு, பணத்திற்காக அந்த ஆடவருக்குத் போலி தாயாக பாசாங்கு செய்ததையும் அப்பெண் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS