புதுடில்லி , ஆகஸ்ட் 22-
இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு தொழிலாளர்களை தருவிக்கும் நடவடிக்கை வெளிப்படையானதாகவும், நியாயமாகவும், முறையாகவும் செயல்படுத்தப்படும் என்று கடந்த செவ்வாய்கிழமை மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2014-ஆம் ஆண்டில் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 10 ஆண்டு காலமாக இந்தியா தொழிலாளர்களை மலேசியாவிற்கு தருவிக்க தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்தெரிவித்துள்ளார்.
ஆதேவேளை, இருநாடுகளுக்கு இடையே எந்தவொரு முறையான வழிகாட்டுதலகளும் இல்லாத போதிலும், 133 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வந்து வேலை செய்து கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.