முயர் , ஆகஸ்ட் 22-
கழிப்பறை ஒன்றின் பின், 12 வயது மாணவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுதியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளுக்காக, தனியார் கல்வி மையத்தின் பாதுகாவலர் ஒருவர் இன்றுஜோகூர், முயர் செயன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வாசிக்கபட்ட பின், குற்றம் சுமத்தப்பட்ட 19 வயது நபர் அக்குற்றச்சாட்டுகளை மறுத்து மறு விசாரணை கோரினார்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் இருந்து கடந்த ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில், பின்னிரவு 1-இல் இருந்து 2 மணிக்குள், குளுவாங்-இல் உள்ள ஒரு தனியார் கல்வி மையத்தின் கழிப்பறை பின் புறத்தில் அந்நபர் அக்குற்றங்களைப் புரிந்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த வழக்கின் மறுசெவிமடுப்பு செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.