பாலியல் தொர்பாடன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார், நாடாளுமனற உறுப்பினரின் முன்னாள் சிறப்பு அதிகாரி

முயர் , ஆகஸ்ட் 22 –

நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 15 வயது மாணவியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது தொடர்பாக, இன்று, முயர் செஸ்யன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஜொகூரின் நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஒருவர் தம்மீதான குற்றத்தை மறுத்து மறு விசாரணை கோரியுள்ளார்.

கடந்த ஜூலை 25-ஆம் தேதி, மாலை 6 மணிக்கு ஸ்ரீ காடிங், பூரா கென்கனா -வில் உள்ள நீச்சல் குளத்தில் அக்குற்றத்தைப் புரிந்ததாக, நான்கு பிள்ளைகளுக்கு அப்பாவான 45 வயது ஜைனூர் JUMA’AT மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், அந்த வழக்கின் மறுசெவிமடுப்பை, நீதிமன்றம் செப்டம்பர் 25-ஆம் தேதியன்று நிர்ணயித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS