பாகன் டத்தோ , ஆகஸ்ட் 22-
பேராக், பாகன் டத்தோ -இல் உள்ள தொழிற்சாலையின் தேங்காய் மட்டை அகற்றும் இயந்திரத்தில், தொழிலாளி ஒருவரின் கை சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 35 வயது வங்காளதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி தனது வேலையை செய்து கொண்டிருந்த சமயத்தில். அவரின் வலது கை அதனுள் சிக்கியதில் மணிக்கட்டு வரை கை நசுங்கியுள்ளது.
அந்த அசம்பாவிதம் குறித்து , இன்று நன்பகல் 12.03 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, நிகழ்விடம் விரைந்த பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் HYDRAULIC கருவிகளைப் பயன்படுத்தி, இயந்திரத்தில் சிக்கிய அத்தொழிலாளியின் கையை வெளியில் கொண்டு வந்துள்ளனர்