வேட்பாளர் பட்டியலில் பெண்களும் உள்ளனர்- அம்னோ தலைவர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-

அடுத்த மாதம் நடைபெறவுள்ள மஹ்கோட்டா மாநிலச் சட்டமன்ற இடைத்தேர்தலில், களமிறங்கவுள்ள வேட்பாளர்களின் பட்டியலில் அம்னோவின் பெண் உறுப்பினர்கள் பெயரும் இருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அகமது ஜாஹித் ஹமிடி, தெரிவித்துள்ளார்.

அதோடு, ஒற்றுமை அரசாங்கத்தைப் பிரிதிநிதித்து மஹ்கோட்டா மாநிலச் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர் யார் என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

வேட்பாளர் பட்டியலில் உள்ள அனைவரையும் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்ட பின்னர், இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் அகமது ஜாஹித் கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS