புத்ராஜெயா,ஆகஸ்ட் 22-
உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவு மீதான அமைச்சுடன், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.
அந்த சிறப்புக் கூட்டம் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையம் PICC-யில், பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1972-ஆம் ஆண்டில் KPDN அமலாக்கப் பிரிவு நிறுவப்பட்ட பின்னர், KPDN அமலாக்க அதிகாரிகளுடனான சிறப்பு ஆணைய அமர்வு கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்று உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கை செலவு மீதான அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமது அலி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நாட்டு மக்களின் வாழ்க்கை சுமையைக் குறைத்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கை செலவு மீதான அமைச்சின் முதன்மை நோக்கம் என்பதையும் அவர் நின்னைவுப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, அனைத்து நிலையிலும் உள்ள அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகளை உள்ளடக்கிய ஊதிய மறுசீரமைப்பை பிரதமர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.