வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவரை செருப்பால் அடிப்பேன் நாயே என்று கூறியிருக்கின்றேன் என பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வாங்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நடிகை சனம் ஷெட்டி வந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ’கேரளா சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை கூறி உள்ளது, இந்த உண்மையை விலை கொண்டு வந்த கமிஷனுக்கு நன்றி.

அதேபோல் தமிழ் திரை உலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருக்கிறது, எனக்கும் அது நடந்திருக்கிறது. வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களை செருப்பால் அடிப்பேன் நாயே என்று நானே திட்டி இருக்கிறேன். பாலியல் ரீதியாக அணுகுபவர்களிடம் விலகி இருக்க வேண்டும்

உங்கள் திறமைக்கு கிடைக்காத எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம், தமிழ் சினிமாவில் எல்லோரும் அப்படியான ஆட்கள் என்று சொல்லவில்லை, என்றாலும் இங்கும் பாலியல் தொல்லை இருக்கிறது, ஆண்கள் நமக்காக போராடுவார்கள் என்று எதிர்பார்க்காமல் நம் உரிமையை நாமே தான் போராடி பெற்றாக வேண்டும்’ என்று கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.