பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-

கோலாலம்பூர் மாநகரில் இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

மாநகரின் நில அடையாளத்தை தாங்கிய கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தின் முதன்மை சாலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, கரைபுரண்டோடிய நீரின் வேகத்தில் பல கார்கள் சிக்கின. இதனால் போக்குவரத்து நிலைக்குத்தியது.

நீரின் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்ததால் திறந்தவெளியில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்களை உடனடியாக அகற்றும்படி உத்தரவிடப்பட்டது.

WATCH OUR LATEST NEWS