பினாங்கு கடப்பகுதியில் உடல் கண்டு பிடிப்பு

ஜார்ஜ் டவுன் , ஆகஸ்ட் 22-

பினாங்கு, ஜார்ஜ்டவுன், தெலுக் பஹாங் கடற்பகுதியில் ஆடவர் ஒருவரின் சடலம் மிதப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் அந்த கடற்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்த கடல்சார் போலீசார், அந்த ஆடவரின் சடலத்தை கண்டதாக அதன் இயக்குநர் Kepten Razali Kasim தெரிவித்தார்.

தெலுக் பஹாங் கடற்பகுதியிலிருந்து தென்மேற்காக 8.9 கடல் மைல் தொலைவில் அச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. சவப்பரிசோதனைக்கு ஏதுவாக அந்த ஆடவரின் உடல் தெலுக் பஹாங் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS