லைசென்ஸின்றி வாகனமோட்டும் அந்நிய நாட்டவர்கள்

கேமரன் ஹைலேண்ட்ஸ்,ஆகஸ்ட் 22-

நாட்டின் பிரதான சுற்றுலா வாசஸ்தலமான கேமரன்மலையில் அதிகமான அந்நிய நாட்டவர்கள், வாகனமோட்டும் லைசென்ஸின்றி, வாகனங்கள் செலுத்துவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து இலாகாவான JPJ தெரிவித்துள்ளது.

சாலைப்போக்குவரத்து இலாகா, கேமரன்மலையில் கடந்த புதன்கிழமை தொடங்கி இரண்டு நாட்களுக்கு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் வாகனமோட்டும் லைசென்ஸின்றி சேவையில் ஈடுபடுத்தப்பட்ட மண்வாரி இயந்திரங்கள் உட்பட 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் ஆர்டி ஃபேட்லி ரம்லி குறிப்பிட்டார்.

பிடிபட்ட 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய 20 ஆண்கள் / பாகிஸ்தான், வங்காளதேசம். இந்தியா மற்றும் நேபால் முதலிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS