பினாங்கு கொடி மலை ஃபனிகுலர் ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-

பினாங்கு கொடிமலையில் ஃபனிகுலர் ரயில் சேவை அடுத்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான இருமுறை பராமரிப்புப் பணிகளில் முதல் கட்டம், ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படுகிறது.

சுற்றுப்பயணிகளின் மிகுந்த கவன ஈர்ப்புக்குரிய ஃபனிகுலர் ரயில் சேவை, மேற்கண்ட காலகட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று பினாங்கு, புக்கிட் பெண்டேரா நகாராண்மைக்கழகம் அறிவித்துள்ளது.

விடுமுறையை கழிப்பதற்கு பினாங்கிற்கு வருகின்றவர்கள் தங்கள் பயண முறையை திட்டமிட்டுக்கொள்வதற்கு இது முன்கூட்டியே அறிவிக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS