ஜாமீன் வழங்க முடியுமா? முடியாதா? அக். 3 இல் முடிவு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-

ஓர் பாலஸ்தீன ஆடவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 14 நாபர்களை ஜாமீனில் விடுவிக்க அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வரும் அக்டோர் 3 ஆம் தேதி முடிவு செய்யவிருக்கிறது.

25 க்கும் 56 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 14 நபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதத் தொகுப்பு செவிடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி K. முனியாண்டி, தீர்ப்பை வரும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைத்தார்.

இந்த 14 நபர்களும், கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு 10.40 மணியளவில் கோலாலம்பூர்,ஜாலான் மயங்- கில் கைப்பேசி தரவுகளை ஊடுருவதற்காக ஓர் பாலஸ்தீனப் பிரஜையான உமர் இசட்எம் அல்பெல்பைசி- யை கடத்தி சென்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS