பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 22-
நாட்டில் இன்சுலின் மருந்து பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருவதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
கணையம் உற்பத்தி செய்யும் ஒரு வகையான ஹோர்மனுக்கு உதவக்கூடிய இன்சுலின் மருந்து போதுமான அளவில் உள்ளது.
இது குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.