கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-
தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அம்னோ முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை விடுவிப்பதற்காக அம்னோ புத்ரி அமைப்பு தொடர்ந்து போராடும் என்று அதன் தலைவி நூருல் அக்மல் சூளுரைத்துள்ளார்.
அதேவேளையில் தனது தந்தையை விடுவிப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் நஜீப்பின் மகள் நூரியானா நஜ்வா -விற்கு ஆதரவாக அம்னோ புத்ரி தொடர்ந்து இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் அம்னோ கட்டடத்தில் இன்று தொடங்கிய அம்னோ புத்ரி மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்துகையில் நூருல் அக்மல் இதனை தெரிவித்தார்.
நஜீப்பை விடுவிக்கும் முயற்சியில் அம்னோ புத்ரி பிரிவு ஒரு போதும் மனம் தளர்ந்து விடாது என்பதையும் பேராளர்கள் மத்தியில் அவர் விளக்கினார்.