கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-
கோலாலம்பூர், ஸ்தாபக், ஜாலான் கெந்திங் கெலாங் – கெம் வார்டிபர்ன் சாலையில் TAR கல்லூரிஅருகில் தாமன் புங்க ராயா- வில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தில் வீடுகளை காலி செய்யும்படி அவற்றின் குடியிருப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையின் காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு நிகழ்ந்து இருப்பதாக மாலை 5.43 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக கோலாலம்பூர் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின்கோமாண்டர் முஹம்மது ஹாசிப் ஜகாரியா தெரிவித்தார்.
மேட்டுப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் பின்புறம் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை என்பது கண்டறியப்பட்டுட்டுள்ளது. எனவே வீடுகளிலிருந்து வெளியேறும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முஹம்மது ஹாசிப் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வங்சா மஜு தீயணைப்பு, மீட்புப்படையை சேர்ந்த 6 வீரர்கள், நிலவரத்தை நேரில் கண்டறிந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.