சிரம்பான் ,ஆகஸ்ட் 22-
தமது தந்தை, இந்து சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதால் 7 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமியர்கள் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்ட தமது தந்தையின் புதைக்குழி தோண்டப்பட வேண்டும் என்று கோரி மகன் ஒருவர் சிரம்பான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த நபரின் வழக்கு மனுவிற்கு நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய மன்றம், எதிர்ப்பு மனு ஒன்றை சார்வு செய்துள்ளது.
இந்த வழக்கு நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய மன்றத்தையும், கூட்டரசு அரசாங்கத்தையும், மாநில அரசாங்கத்தையும் இலக்காக கொண்டு தொடுக்கப்பட்டதாகும். எனவே இவ்வழக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி, இஸ்லாமிய மன்றம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் உடலை புதைக்குழியிலிருந்து தற்போது தோண்டி எடுப்பது முறையல்ல என்று அந்த சமய மன்றம் தனது எதிர்ப்பு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மலாக்கா செட்டி சமூகத்திற்கு அப்பாற்பட்டு, தனி கலாசாரத்தோடு வாழ்ந்த இந்து பாபா நியோன்யா சமூகத்தை சேர்ந்தவர் தமது தந்தை என்று 51 வயது ரோஸ்லி மஹத் குறிப்பிட்டுள்ளார்.
1941 ஆண்டில் பிறந்த தமது தந்தை மஹத் சுலைமான், இந்து கலாச்சாரத் தன்மையுடன் வளர்க்கப்பட்டவர் என்று அந்த நபர் வாதிட்டுள்ளார்.
எனவே நெகிரி செம்பிலாான்,சிகாமத் இஸ்லாமிய மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்பட்ட தமது தந்தையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, இந்து சம்பிராதயப்படி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று ரோஸ்லி மஹத் – ட்டும், அவரின் ஐந்து உடன் பிறப்பிகளும் இந்த வழக்கை தொடுத்துள்ளனர்.