கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-
வங்காளதேசத் தொழிலாளர்களை வேலைக்கு தருவிப்பது தொடர்பான மோசடியில் அந்த நாட்டின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூளையாக செயல்பட்டுள்ளனர் என்று வங்காளதேச ஊழல் துடைத்தொழிப்பு நிறுவனத்தின் அதிர்ச்சியூட்டும் தகவலை உள்துறை அமைச்சு கடுமையாக கருதுகிறது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடியில் மலேசியாவிற்கு தருவிக்கப்பட்ட வங்களாதேசத் தொழிலாளர்களும் சம்பந்தப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று சைபுடின் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு வங்காளதேசத் தொழிலாளர்களை தருவிக்கும் திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் முழு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.