கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-
பாரிசான் நேஷனலின் முதுகெலும்பாக விளங்கும் அம்னோ, வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடக்கூடும் என்று அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே கோடி காட்டியுள்ளார்.
16 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கட்சிகளுடன் இணைந்து, அம்னோ இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. ஆனால், தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அக்மல் சலே குறிப்பிட்டார்.
அம்னோ இன்று சிலருடன் இணைந்து இருக்கலாம். அடுத்த வாரம் அதன் முடிவு வேராக இருக்கலாம். மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் தேவையைப் பொறுத்து அம்னோ முடிவு செய்யும் நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அம்னோ தனித்துப் போட்டியிடுவது மூலம் அது கட்சிக்கு பலன் அளிப்பதாக இருக்குமானால் கட்சி உறுப்பினர்கள் அது குறித்து தீர்க்கமாக முடிவு எடுப்பர் என்று அவர் மேற்கோள்காட்டினார்.