சிரம்பான், ஆகஸ்ட் 23-
சிரம்பான், ஜாலான் டோக் உங்கு- வில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் மூவரை கைது செய்துள்ளனர்.
17,18, 20 வயதுடைய அந்த மூவரும் நேற்று வியாழக்கிழமை மதியம் 12.40 மணியளவில் சிரம்பான் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஹட்டா சே தின் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில் நிகழ்ந்த இந்த கைகலப்பு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சண்டையில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களில் இதுவரையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இச்சம்பவத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஏசிபி முகமது ஹட்டா குறிப்பிட்டார்.
