ஜார்ஜ் டவுன் , ஆகஸ்ட் 23-
ஐந்து ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்டதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள ஓர் உயர் போலீஸ் அதிகாரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
37 வயதுடைய அந்த போலீஸ் அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக அவரை வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு பினாங்கு, ஜார்ஜ்டவுன், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செபராங் பேரை உதர மாவட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அந்த இன்ஸ்பெக்டர் இன்று காலை 9 மணியளவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டது.
கோழிச்சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அந்த இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.