கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் – க்கு எதிராக 70 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணம் மாற்றம் தொடர்பிலான 17 குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கு சட்டத்துறை அலுவலகத்தில் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவிற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
ரோஸ்மாவிற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சட்டத்துறை அலுவலகத்தில் காணப்பட்டுள்ள இணக்கம் தொடர்பில் ரோஸ்மாவின் வழக்கறிஞர் ஃபிரோஸ் உசேன் அகமது ஜமாலுதீன் – னும், துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அஹ்மத் அஸ்க்ராம் கரீப்- ப்பும் இதனை தெரிவித்தனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி K. முனியாண்டி முன்னிலையில் இரு தரப்பினரும், சட்டத்துறை அலுவலகத்தில் காணப்பட்ட இணக்கம் குறித்து விவரித்தனர்.
இந்த இணக்க நிலை, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதையும் அவர்கள் தங்கள் வாதத்தில் சுட்டிக்காட்டினர்.