பிட்டத்தை தடவியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

தெலுக் இந்தான் , ஆகஸ்ட் 23-

தொழிற்சாலை ஒன்றில் தன்னுடன் பணியாற்றும் பெண் மேற்பார்வையாளரின் பிட்டத்தை பிடித்து,ஆபாச சேட்டைப் புரிந்ததாக ஊழியர் ஒருவர் தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.


இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சியாம்சுல் சியாவல் ஹோஸ்னோன் என்ற 35 வயதுடைய அந்த நபர், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் கீழ் பேரா மாவட்டம்,ஜாலான் சங்கட் ஜாங் – கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 28 வயது பெண் மேற்பார்வையாளரிடம் ஒழுக்ககேடாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

வேடிக்கைக்காக அவ்வாறு நடந்து கொண்டதாக கூறி, சிரித்த அந்த நபருக்கு எதிராக சம்பந்தப்பட்ட மாது போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த தொழிற்சாலை ஊழியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS