அண்டை வீட்டுக்காரரின் மூக்கை கடித்ததாக மாது மீது குற்றச்சாட்டு

மலாக்கா,ஆகஸ்ட் 23-

அண்டை வீட்டில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளின் சத்தத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் அந்த வீட்டின் உரிமையாளரின் மூக்கை கடித்து காயப்படுத்தியதாக மாது ஒருவர் மலாக்கா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

37 வயது அட்ரியன் லீவ் சீவ் வெர்ன் என்ற அந்த மாது மாஜிஸ்திரேட் நோர் சியாலியாட்டி முகமது சோப்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்ட வாசிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாது, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி மாலை 6 மணியளவில் மலாக்கா தெங்கா மாவட்டம், புக்கிட் பேருவாங், தாமன் புங்கா ராயா, ஜாலான் புங்கா ராயா – என்ற முகவரியில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் அண்டை வீட்டுக்காரரான 40 வயது லாவ் சியோங் பிங்- என்பவரின் மூக்கில் கடும் காயம் விளைவித்தாக அந்த மாது மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 323 ஆவது பிரிவின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS