அம்னோ வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்காது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-

அம்னோ முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் விடுதலைக்காக அம்னோ தொடர்ந்து முன்னெடுத்து வரும் போராட்டத்தை முடக்கி, அதனை தோல்வி அடைய செய்வதற்கு பக்காத்தான் ஹராப்பான் முயற்சிகள் மேற்கொள்ளுமானால் அதனை அம்னோ வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்காது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்னோவின் தற்போதைய தலையாய போராட்டம் நஜீப்பின் விடுதலையாகும். காரணம், நாட்டிற்கும், மக்களுக்கும் அவர் ஆற்றிய சேவையையும், தியாகத்தையும் எளிதில் மறந்து விட முடியாது.

எனவே அவரை விடுவிப்பதற்கு அம்னோ மேற்கொள்ளும் முயற்சிக்கு பக்காத்தான் ஹராப்பான் வேம்பாக மாறுமானால் அதனை களையெடுப்பதில் அம்னோ பின்வாங்காது என்று அம்னோ உதவித் தலைவர் கலீத் நோர்டின் நினைவுறுத்தினார்.

அம்னோவின் 2024 ஆம் ஆண்டுக்கான பேராளர் மாநாட்டில் தலைவர் உரைக்கு பின்னர் கருத்துரைக்கையில் தற்காப்பு அ மைச்சரான கலீத் நோர்டின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS