கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 23-
மூன்றாம் படிவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் சபா போலீசார் மாணவர்கள் உட்பட எட்டு பேரை கைது கைது செய்துள்ளனர்.
அந்த 15 வயது மாணவி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் கோத்தா கினாபாலு வட்டாரத்தில் சில வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சந்தேகப்பேர்வழிகள் பிடிபட்டுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காசிம் மூடா தெரிவித்துள்ளர்.
14 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எட்டு பேரும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த பள்ளி மாணவி புகார் செய்த 24 மணி நேரத்திலேயே இவ்விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.