21 பிரதான சாலைகள் மூடப்படும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-

நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சீருடை குழுவினரின் அணிவகுப்பு ஒத்திகைக்கு வழிவிடும் வகையில் புத்ராஜெயாவில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரையில் ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் வரையில் 21 பிரதான சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

புத்ராஜெயாவில்லெபுஹ் வவாசன், ஜாலான் துன் அப்துல் ரசாக், லெபுஹ் பெஸ்டாரி, பெர்சியராம் பெர்டானா, ஜாலான் பிஜேகே2 ஆகியவை அந்த 21 சாலைகளில் அடங்கும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட காலக்கட்டத்தில் புத்ராஜெயாவிற்கு பயணம் மேற்கொள்கின்றவர்கள், தங்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS