கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-
வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனலின் அனைத்து கட்சிகளும் தராசு சின்னத்தையே பயன்படுத்த வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி எடுத்துள்ள முடிவை மசீச வரவேற்றுள்ளது.
பாரிசான் நேஷனல் உறுப்புக்கட்சிகளும் அந்த விருப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் இன்று தனது நிலைப்பாட்டை அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் இன்று தொடங்கிய அம்னோ பேராளர் மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
வருகின்ற 16 ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் உறுப்புக்கட்சிகள் தராசு சின்னம் பயன்படுத்தப்படுவதை மசீச முழுமையாக வரவேற்பதாக டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.