அரச மலேசிய போலீஸ் படை தடை விதிக்கக்கூடாது

புத்ராஜெயா,ஆகஸ்ட் 23-

அரச மலேசிய போலீஸ் படை ஏற்பாடு செய்யக்கூடிய நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிக்க முற்படும் எந்தவொரு தகவல் சாதனத்தையும் கட்டுப்படுத்த வேண்டாம் என்று போலீஸ் படைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் போலீஸ் படையுடன் தொடர்பு கொண்டு தாம் பேசியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். Malaysia Kini- க்கு போலீஸ் படை விதித்துள்ள தடை போன்று எந்தவொரு தகவல் சாதனத்திற்கு போலீஸ் படை தடை விதிக்கக்கூடாது என்று தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.

உள்துறை அமைச்சின் கீழ் உள்ள புக்கிட் அமான் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு, சட்ட அமலாக்கப்பிரிவு மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் நேற்று ரகசிய கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு போலீஸ் படையின் ஊடகவியல் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் , Malaysia Kini நிருபருக்கு அனுமதி மறுத்திருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS