மஸ்ஜிட் இந்தியா வர்த்தகர்கள் கவலை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-

மலேசியாவிற்கு சுற்றுப்பயணியாக வந்த இந்திய மாது ஒருவர், இன்று காலையில் கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் புதையுண்ட சம்பவம், அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களை அச்சம் அடைய செய்துள்ளது.

அந்த வர்த்தகத் தலத்திற்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் மற்றும் பாதசாரிகளுக்காக உருவாக்கப்பட்ட நடைப்பாதையில் திடீரென்று ஆளாமான குழி ஏற்பட்டு, மண் உள்வாங்கிய சம்பவம், அப்பகுதியில் ஒரு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அப்பகுதியில் உள்ள நடைப்பாதைகளில் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகரின் முக்கிய வர்த்தகத் தலமான மஸ்ஜிட் இந்தியாவிற்கு இனி மக்கள் வருகை தருவதற்கு அஞ்சுவர் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

https://www.thestar.com.my/news/nation/2024/08/23/jalan-masjid-india-traders-worry-about-repeated-appearances-of-sinkholes?dmplayersource=share-send

WATCH OUR LATEST NEWS