கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் உயிருடன் புதையுண்ட ஓர் இந்தியப் பிரஜையான மாதுவை கண்டு பிடிக்கப்படும் வரையில் அவரின் குடும்பத்தினர் மலேசியாவிற்கு தங்குவதற்கு அவர்களுக்கான விசாவை நீட்டிக்கும்படி மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலேசியாவில் சுமார் இரண்டு மாத காலம் தங்கியிருந்த அந்த மாதுவின் குடும்பத்தினர், நாளை சனிக்கிழமை தாயகம் திரும்புவதற்கு திட்டமிட்டு இருந்தனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
அவர்கள் மலேசியாவிற்கு தங்கியிருப்பதற்கு நாளை சனிக்கிழமை வரை மட்டுமே விசா அனுமதி உண்டு. இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாது கண்டு பிடிக்கப்படும் வரையில் அவரின் குடும்ப உறுப்பினர்களின் விசாவை நீட்டிக்கும்படி இந்திய தூதரகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி முகமட் இசா குறிப்பிட்டார்