சிறிது நேரத்திற்குள் குரல் அடங்கி விட்டது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-

கல் நாற்காலியில் அமர்ந்திருந்த தன்னை நோக்கி நடைப்பதையில் வந்து கொண்டிருந்த தனது மனைவி, கண் எதிரே, மண் இடிந்து, புதைக்குழியில் விழுந்த போது உதவிக் கோரி, கூச்சலிட்டதாக ஓர் இந்தியப் பிரஜையான அவரின் கணவர் கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

அந்த புதைக்குழியில் இருந்து தனது மனைவியை காப்பாற்றுவற்கு தாம் எத்தணித்த போது, உதவிக் கோரிய அவரின் குரல் சிறிது நேரத்திற்குள் அடங்கி விட்டதாக அந்த இந்தியப் பிரஜை தெரிவித்தார்.

கோலாலம்பூர், Masjid India, Malayan Mansion- முன்புறம் நடைப்பாதையில் இன்று காலை 8.22 மணியளவில் திடீரென்று ஏற்பட்ட பெரும் குழியில் 48 வயது இந்திய மாது விழுந்த சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் அந்த மாதுவின் கணவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மலேசியாவை சுற்றிப்பார்த்து விட்டு, நாளை சனிக்கிழமை தாயகம் திரும்புவதற்கு தாங்கள் திட்டமிட்டு இருந்த வேளையில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்து விட்டதாக அந்த மாதுவின் கணவர் சோகத்துடன் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS