கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-
Rahmah ரொக்க உதவித் தொகைக்கான இவ்வாண்டின் மூன்றாம் கட்ட உதவித் தொகையை நாடு முழுவதும் உள்ள 85 லட்சம் பெறுநர், அடுத்த வாரம் வியாழக்கிழமை முதல் பெறுவர் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக மொத்தம் 170 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொருவரும் அவர்களுக்கான பிரிவுக்கு ஏற்ப 650 வெள்ளி வரையில் இந்த உதவித் தொகையை பெறவிருக்கின்றனர்.
வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் அவர்கள் அந்த உதவித் தொகையை பெறும் வேளையில் மேல்முறையீடு செய்து கொண்டவர்கள், செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் ரொக்கத் தொகையை பெறுவர் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.