தஞ்சோங் மாலிம் , ஆகஸ்ட் 24-
தஞ்சோங் மாலிம், பெஹ்ராங் மற்றும் ஸ்லிம் ரிவேர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய முஅலிம் மாவட்டத்தில் ஏற்பட்ட நீர்ப்பெருக்கினால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை ஸ்லிம் ரிவேர் , Slim Vilage கிராமத்தில் உள்ள பிரதான நீர் அணைக்கட்டு உடைந்து, நீர்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று முதல் முஅலிம் மாவட்டத்தில் வசிப்பவர்களில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் பயனீட்டாளர்களில் 70 விழுக்காட்டினர் தங்கள் வீடுகளுக்கான நீர் மற்றும் மின்சாரத் துண்டிப்புக்கு ஆளாகி, பாதிக்கப்பட்டுள்ளர்.
பாலம் இடிந்து விழுந்ததால் சவுக் நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து பாயும் பிரதான நீர்குழாய் உடைந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பேரா மந்திர பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமது தெரிவித்தார்.
வெள்ளத்தில் அடித்து வந்த பெரிய மரங்கள் அந்த பாலம் உடைவதற்கு காரணமாக அமைந்ததாக அவர் விளக்கினார்