கோலாலம்பூர், ஆகஸ்ட் 24-
ஓர் இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலெட்சுமி என்பவர், நடைப்பாதை இடிந்து விழுந்து, குழிக்குள் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து கோலாலம்பூர் மாநகரின் பிரதான வர்த்தகப் பகுதியான மஸ்ஜிட் இந்தியாவில் நடமாட்டத்தை குறைத்துக்கொள்ளும்படி பொது மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வர்த்தகப்பகுதியல் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் வரையில் மஸ்ஜிட் இந்தியாவில் நடமாட்டத்தை சற்று குறைத்துக்கொள்ளும்படி கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கேட்டுக்கொண்டுள்ளார்.
மஸ்ஜிட் இந்தியா பகுதி, தற்போதைய நிலவரத்தின்படி பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியை பயன்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளவர்கள், சற்று முன்எச்சரிக்கையாக, பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி அந்த உயர் போலீஸ் அதிகாரி, பொது மக்களுக்கு நினைவுறுத்தியுள்ளார்.