ஒன்றிணைந்து செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 24-

கோலாலம்பூர் மாநகரில் ஒரு வளர்ச்சித் திட்டத்தை மேம்படுத்தப்படும் போது, அப்பகுதியில் நடைப்பாதை இடிந்து விழுவது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நிலத்தடி பயன்பாடுகளின் கட்டமைப்பை, முறைப்படுத்துவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் நிலத்தடி பயன்பாட்டுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும் படி தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கேட்டுக்கொண்டார்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த மாநகரில் நிலத்தடிப்பகுதியில் அதிகமான பயன்பாட்டு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சாக்கடை கால்வாய்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் நீர் குழாய்கள், மின்சார கேபள்கள் நிலத்தடி பகுதிகளில் பாய்கின்றன.

அவை முறையான அமைப்பு முறையை கொண்டு இருப்பதற்கும், ஒவ்வொரு பயன்பாட்டு தொடர்புமுறையையும் எந்ததெந்த இடத்தில் இருக்கின்றன என்பதை துல்லியாக அறிந்து வைத்திருப்பதற்கும் அதற்கான வரைப்படத்தை ஏற்படுத்துவதில் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்குள் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தேவை என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

நிலத்தடியில் நீர் குழாய்களும், கேபல்களும் பாய்கின்றன. ஆனால், அவை எங்குத் தொடங்கி, எங்கே முடிகின்றன என்பதை அறிந்து கொள்வதற்கு இன்னமும் தோண்டிப் பார்க்கும் நிலை உள்ளதே தவிர அதற்கான வரைப்படங்கள் இல்லை. அது குறித்து நிறைய புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்

WATCH OUR LATEST NEWS