சண்டகன் , ஆகஸ்ட் 24-
கார் ஒன்று, லோரியுடன் மோதியதில் காரில் பயணம் செய்த ஐவரில் இருவர் உயிரிழந்தனர். இதர மூவர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம், இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் சபா, சண்டக்கான்,ஜாலன் கம் – கம் சாலையின் 17 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. இதில் ஒரு பெண்ணும், ஓர் ஆணும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து காலை 9.09 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக சண்டக்கான் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத் தலைவர் Severinus Sainkul தெரிவித்தார்.
ஐந்து டன் லோரியும், Perodua Axia காரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டதில் கடுமையான காயங்களுக்கு ஆளான மூவர், பொது மக்களால் காப்பாற்றப்பட்டனர். இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, சம்பவ இடத்திலேயே மாண்ட ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் பிரத்தியேக சாதனங்களைப் பயன்படுத்தி, அவர்களின் உடல்களை தீயணைப்புப்படை வீரர்கள் மீட்டனர் என்று Severinus Sainkul குறிப்பிட்டார்.