பெய்லி பாலம் தற்காலிகமாக நிர்மாணிக்கப்படும்

தஞ்சோங் மாலிம் , ஆகஸ்ட் 24-

மலைமுகட்டில் ஏற்பட்ட திடீர் நீர்ப்பெருக்கு காரணமாக உடைந்து தரைமட்டமான பேரா,ஜாலான் ஸ்லிம் நதி – பெஹ்ராங் ஹுலு -வில் இருந்த ஜம்பதன் லாமா சுங்கை ஸ்லிம் பாலத்திற்கு பதிலாக அவ்விடத்தில் தற்காலிமாக பெய்லி பாலம் ஒன்று நிர்மாணிக்கப்படும் என்று பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.

ஆபத்து, அவசர வேளைகளில் பயன்படுத்தக்கூடிய இரும்பினால் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு, தூக்கி பொருத்தக்கூடிய இரும்புப்பாலமான பெய்லி , விரைந்து நிர்மாணிக்கப்படும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க ஜம்பதன் லாமா சுங்கை ஸ்லிம் பாலம், இரண்டாவது உலகப்போரில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கும், ஜப்பானிய சிப்பாய்களுக்கும் இடையில் நிகழ்ந்த போரில் ஓரிட மக்கள் கடந்த செல்வதற்கு சாட்சியாக விளங்கியது. தவிர பிரிட்டிஷாரின் இராணுவத் தளவாடப்பொருட்களை கொண்டு செல்தற்கு அந்த எஃகு ( EKKU ) பாலம் நிர்மாணிக்கப்பட்டு இருந்ததாக சாரணி முகமட் குறிப்பிட்டார்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஓர் எச்சரிக்கை நடவடிக்கையாக 77 மீட்டர் நீளமுள்ள வரலாற்று சிறப்புமிக்க பாலத்தின் பிரதானப் பாதை தற்காலிகமாக மூடப்படுவதாக மந்திரி பெசார் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS